தென்காசி மாவட்டம் இலஞ்சி டி.டி.டி.ஏ. டி.எஸ். டேனியல் ராசம்மாள் கல்வியியல் கல்லூரியில், உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவ சந்திரன், நிர்வாக இயக்குனர் பாரதி ராஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் படி புற்று நோய் தடுப்பு முறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் தென்காசி கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் தங்கம் வரவேற்றார்.



நிகழ்ச்சியில், தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவர் அப்ரசித்தன், பொது மேலாளர் அகமது பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு மார்பக புற்று நோய், கர்ப்பபை புற்று நோய், கர்ப்பவாய் புற்று நோய், வாய் மற்றும் தாடை புற்று நோய், மூளை புற்றுநோய், இரைப்பை புற்று நோய், உணவு குழாய் புற்று நோய், குடல் புற்று நோய், மலக்குடல் புற்று நோய், எலும்பு புற்று நோய், சினைப்பை புற்று நோய், தொண்டை புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், கணையம் புற்று நோய், சிறுநீரக புற்று நோய், சிறுநீர்பை புற்று நோய், விதைப்பை புற்று நோய், ஆண்குறி புற்று நோய் மற்றும் நவீன புற்று நோய்க்கான அறிகுறிகள், புற்று நோய்க்கான காரணம், புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஷீலா நவரோசி நன்றி கூறினார்.
இந்நிகழ்வில், உதவி பேராசிரியர்கள் ஜெனிபர், லீதியாள் சொர்ண ஜெயா, ஐரின், உடற்கல்வி ஆசிரியர் ஜசக் ஜான்சன், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், திவ்யா, பேதுரு தென்காசி கேன்சர் சென்டர் கண்காணிப்பாளர்கள் சசிகலா, தாஹிரா பானு மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் இலஞ்சி குமார் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.