தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 05.02.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, புகையிலை தடுப்பு பணி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வது, பருவ கால நோய்கள் தடுப்பு பற்றிய நடவடிக்கைகள், இள வயது திருமணம் மற்றும் இள வயது கர்ப்ப தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் கடந்த மாதம் நிறைவேற்றப் பட்டுள்ள பணிகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



முன்னதாக முத்துலட்சுமி ரெட்டி மற்றும் பொது சுகாதார துறையின் பணிகள் பற்றிய அடங்கிய பாடல் மற்றும் குறும்படங்கள் QR கோடுடன் உடைய விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார். மேலும், கடந்த வருடத்தில் தேசிய தரச் சான்றிதழ் பெற்ற இலத்தூர், குருக்கள் பட்டி மற்றும் மேலகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் குழுவினர், குடும்ப நலத்துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. கோவிந்தன், இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ). மரு. கீதா கிருஷ்ணன், துணை இயக்குநர்கள் மரு. துரை (காசநோய்), மரு. அலர் சாந்தி (தொழுநோய்), மரு.ராம நாதன் (குடும்ப நலம்), பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறை, சமூக நலத் துறை, காவல் துறை, கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வட்டார, மாவட்ட அளவிலான அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.