செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியரின் அழகிய ஓவியப் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி 05.02.2025 புதன் கிழமை நடைபெற்றது. மின்நகா் ஹியூமன் அப்லிப்ட் டிரஸ்ட் இயக்குநா் ரெங்கநாதன் தலைமை தாங்கி ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்தார். மின்நகா் சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜய லெட்சுமி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்ல இயக்குநா் திருமாறன் மற்றும் தேசிய பசுமைப் படையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் ஆசிரியா் டேனியல், உடற்கல்வி ஆசிரியா் ஜான்ஸன், ஓவியா்கள் கடையநல்லூா் கொண்டல் ராஜூ, தென்காசி நாஞ்சில் குமார், செங்கோட்டை மாரியப்பன், மின்நகா் ஹாரின் ஜூடு மற்றும் ஓவிய ஆசிரியா் முத்து ராமலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனா்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் பீட்டா் ஜூடு அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில், தலைவா் மற்றும் முன்னிலை வகித்த பெரியோர்கள் தங்கள் உரையில் மாணவ மாணவியா் தங்கள் ஓய்வு நேரங்களை ஓவியம் வரைதல் போன்ற பயனுள்ள வகையில் மாற்றிட வேண்டும் என்றும், சமூக ஊடகங்களின் பிடியிலிருந்து மீண்டு வெளியேற ஓவியம் வரைதலை ஒரு பாலமாகக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினா். கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவியரின் ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவியா், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவியக் கண்காட்சியினை கண்டு மகிழ்ந்தனர்.

விழாவில், புதுச்சேரி மக்கள் முதல்வா் ரங்கசாமி கையொப்பமிட்ட ஞானகுரு சிறப்பு விருதுக்கான சான்றிதழை பள்ளித் தலைமை ஆசிரியா் பீட்டா் ஜூடுக்கும், கலை மூதாளா் சிறப்பு விருதுக்கான சான்றிதழை பள்ளி ஓவிய ஆசிரியா் மாரியப்பனுக்கும் வெங்காடம்பட்டி திருமாறன் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், கண்காட்சிக்கு படைப்புகள் வழங்கிய 30 மாணவ மாணவியருக்கும் அரிய பல புத்தகங்களை பரிசாக வழங்கினார் திருமாறன். ஓவிய கண்காட்சிக்கு படைப்புகளை வழங்கிய மாணவ மாணவியருக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கண்காட்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய பள்ளி ஓவிய ஆசிரியா் மாரியப்பன் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.