தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவி மைதீன் பீவி ஹசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் ஆண்டறிக்கை வாசித்தார். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான், தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாசுல் அஷ்ரப், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான, மாணவ மாணவிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு தலைவி பரிதா அப்துல் காதர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.