சுரண்டை நகராட்சி பகுதியில் வாறுகால் அமைத்திட வலியுறுத்தி திடீரென பெண்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட 8-வது தெருவில் வாறுகால் வசதி இல்லை எனவும், இப்பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் தனியார் நிலத்தில் தேங்குவதாகவும், இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக் கேடு மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில், இப்பகுதியில் விரைவில் வாறுகால் வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் ராஜ் தலைமையில் பெண்கள் திடீரென திரண்டு வந்து நகராட்சி ஆணையர் ராம திலகத்திடம் கோரிக்கை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சுரண்டை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.