நூதனமிக்க போராட்டத்தில் களமிறங்கிய முஸ்லிம் லீக்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவண சமுத்திரம் பகுதியில் வேலூர் இப்ராஹிமுக்கு செருப்பு அனுப்பும் நூதன போராட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சியினர் திடீரென களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் வக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி குறித்து அவதூறாக பேசினார். அவரை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் தென்காசி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பீரப்பா தலைமையில் இரவண சமுத்திரம் இளைஞர் அணியினர், வேலூர் இப்ராஹிமுக்கு செருப்பு அனுப்பி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிரைமரி தலைவர் இக்பால், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் செய்யது நாகூர் ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுஸ், காலித், சலீமுல்லாஹ், சக்கூர், இஸ்ஹாக், அக்பர், தன்சீர், ரியாஜ், ஜவாத், காஜா, ஷரீஃப் உள்ளிட்ட இளைஞர் அணியினரும் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட அமைப்புச் செயலாளருமான கட்டி அப்துல் காதர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, “முடிந்தால் அடித்துப்பார்” என்று தலைப்பிட்டு, செருப்பை தபால் மூலம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது கருத்து சுதந்திரம் சிதைந்து விட்டதாகவும், சீமான் பெரியாரை மண்ணு என்று பேசுவதும், எச்.ராஜா பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வை தேசத்துரோகி என்று பேசுவதும் சாதாரணமாகி விட்டது. இழிவாக பேசுவதை கருத்து சுதந்திரம் என்று நினைக்கின்றனர். இவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!