நல்லிணக்க விருதுடன் 1 கோடி பரிசு பெற்ற ஊராட்சிகள்..

தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ. 1 கோடி பரிசு பெற்ற கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சி அலுவலர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடை பிடித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலை தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் ஊராட்சி அலுவலர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

 

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் கே.ஆலங்குளம், கலிங்கப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலமடை ஊராட்சிக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பரையன தாங்கல் ஊராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரியனார் கோவில், வெங்கட சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கும், சேலம் மாவட்டத்தில் மணி விழுந்தான் ஊராட்சிக்கும், செங்கல் பட்டு மாவட்டத்தில் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கும், கோயம் புத்தூர் மாவட்டத்தில் ஒட்டர் பாளையம் ஊராட்சிக்கும், நாகப் பட்டினம் மாவட்டத்தில் தேரூர் ஊராட்சிக்கும் என 10 ஊராட்சிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது முதலமைச்சரால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு உள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!