குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்..
பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் அஸ்வினை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் அஸ்வின் உடலை நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.