தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி-பாதிப்பு 241 ஆக உயர்வு…

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று (20/06/2020) வரை கொரோனா தொற்றால் 218 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தில் இருந்தும், மற்ற 22 பேர்கள் சென்னையில் இருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தென்காசியில் இன்று (21.06.2020) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், வெளியிலிருந்து அப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களை வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்க வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தடுப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!