தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பு..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தென்காசியில் மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆளுநரின் அரசியல் அத்துமீறல்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் பாரபட்சத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிற அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கணபதி, வேலுமயில் அசோக்ராஜ், தங்கம், குணசீலன், உச்சிமாகாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ. ராஜா, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனி நாடார், தென்காசி நகர் மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.சாதிர், நகர்மன்றத் துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா, தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் என். வெங்கடேஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா, தென்காசி நகர மதிமுக செயலாளர் ஜி.கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, சுப்பையா, கிட்டப்பா, விடுதலை சிறுத்தைகள் சுட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம், மண்டல துணைச் செயலாளர் சித்திக், சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, பொதுக்குழு உறுப்பினர் முகம்மது அலி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பால்ராஜ், கண்ணன், நடராஜன், மாரியப்பன், பேராசிரியை சங்கரி, லெனின் குமார், பால்ராஜ், ஆயிஷா, மேனகா, குருசாமி, ராமமூர்த்தி, வன்னிய பெருமாள், திமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை, தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி, ஆர்.எம்.அழகு சுந்தரம், கீழப்பாவூர் க. சீனித்துறை, சிவன் பாண்டியன், கடையம் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், நகர திமுக செயலாளர்கள் செங்கோட்டை வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன், கடையநல்லூர் அப்பாஸ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் திமுக செயலாளர்கள் மேலகரம் இ. சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டியபுரம் பண்டாரம், பண்பொழி கரிசல் ராஜராஜன், அச்சன்புதூர் வெள்ளத்துரை, புதூர் கோபால், சார்பு அணிகளின் நிர்வாகிகள் இளைஞர் அணி குற்றாலம் டி. ஆர் கிருஷ்ணராஜா, மாணவர் அணி ரமேஷ், சிறுபான்மை அணி இஞ்சி இஸ்மாயில், தொண்டர் அணி இசக்கி பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் அயூப்கான் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









