தென்காசி மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.06.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ, 04633-213179 (அல்லது) 9597495097 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. Genearth Services, Tvs Training Services LUL பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









