தென்காசியில் சர்வேதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி; மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வேதேச தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில் இன்று (26.06.2024) நடத்தப்பட்ட பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார். இப்பேரணி நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு, போதை ஒழிப்பு தொடர்பான கோஷங்கள் மற்றும் பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. பேரணிக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தென்காசி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.



இப்பேரணியில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஹ.கவிதா, மாவட்ட சமூகநல அலுவலர், செல்வி.மதிவதனா குழந்தை நலக்குழு உறுப்பினர், முனியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், குழந்தைகைள் பராமரிப்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள், தொழிற்பயிற்சி மைய பணியாளர்கள் மற்றும் மலர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், செண்ட மேரீஸ் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் என மொத்தம் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.