தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெறும் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் இலவச பஸ்பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன்.25 ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ்பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் 25.06.2024 அன்று காலை 10:00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக குறைத்தீர்க்கும் நாள் கூட்டரங்கில் வைத்து நடைப்பெறவுள்ளது. இலவச பஸ்பாஸ் தேவைப்படும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெற மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை- நகல், குடும்ப அட்டை- நகல், ஆதார் அடடை- நகல், வாக்காளர் அட்டை- நகல் புகைப்படம் – 5 மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்வதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.