தென்காசியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு..
உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலக அளவில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 12.06.2024 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.



இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.