தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் 78 வது சுதந்திர தின விழா நடந்தது. தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 482 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சீனிவாசன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.





சுதந்திரப் போராட்ட தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதி (ஓய்வு) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கெளரவித்தார். தென்காசி மாவட்ட வாத்திய இசைக்குழு முதல் நிலைக்காவலர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் வாத்திய இசைக்குழுவினர் முன் நின்று அழைத்துச் செல்ல காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில், சிறப்பாக பணியாற்றியமைக்காக தென்காசி காவல் துறை சார்பில் 44 காவலர்களுக்கும், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் 32 அலுவலக பணியாளர்களுக்கும், வனத்துறை சார்வில் 02 வன அலுவலர்களுக்கும், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட அளவிலான 12 அலுவலர்களுக்கும், 2024 பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த 107 அலுவலர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 54 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் 38 அலுவலக பணியாளர்களுக்கும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் 03 அலுவலர்களுக்கும், மாவட்ட திட்ட அலுவலகத்தின் 04 அலுவலர்களுக்கும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் 02 அலுவலர்களுக்கும்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 04 அலுவலர்களுக்கும், வணிக வரித்துறையின் 01 அலுவலருக்கும். மாவட்ட தொழில் மையத்தின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையின் 07 அலுவலக பணியாளர்களுக்கும், கதர் கிராமத் தொழில்கள் (தி.லி) துறையின் 01 அலுவலருக்கும், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் 04 பணியாளர்களுக்கும், மாவட்ட நூலக அலுவலகத்தின் 04 பணியாளர்களுக்கும், வேளாண்மைத்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், வேளாண்மைப் பொறியியல் துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், தோட்டக்கலை துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் துறையின் 17 பணியாளர்களுக்கும்,
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் 25 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 06 பணியாளர்களுக்கும், பால்வளத்துறையின் (தி.லி) 03 அலுவலக பணியாளர்களுக்கும், பால் உற்பத்தி மற்றும் உள்ளீடு துறையின் 01 அலுவலருக்கும், கால்நடை பராமரிப்புத்துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 11 பணியாளர்களுக்கும், பேரூராட்சித்துறையின் 05 பணியாளர்களுக்கும், பட்டு வளர்ச்சித் துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், பொதுப்பணித்துறையின் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) 03 அலுவலக பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், கூட்டுறவுத்துறைத்தின் 01 அலுவலருக்கும், நகர் ஊரமைப்புத் துறையின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், வேளாண் அறிவியல் மையத்தின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் 05 பணியாளர்களுக்கும்,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் 05 அலுவலக பணியாளர்களுக்கும், இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் சேய் ஊர்தி திட்டங்கள் துறையின் 04 பணியாளர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையின் 04 பணியாளர்களுக்கும், உலக சாதனை படைத்த 04 பள்ளி மாணக்கர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 10 பணியாளர்களுக்கும், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், தொழிலாளர் துறையின் 01 அலுவலக பணியாளருக்கும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் 01 அலுவலக பணியாளருக்கும் என மொத்தம் 482 நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், வருவாய்த் துறையில் 20 ஆண்டுகள் விபத்தின்றி அரசு வாகனத்தை ஓட்டிய வகைக்கு அரசு மூலம் 4 கிராம் தங்கப் பதக்கத்தினை அழகிரிசாமி, ஈர்ப்பு ஓட்டுநர் அவர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்கான முன்மாதிரி பங்களிப்பிற்காக அரசு வழங்கும் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை சமூக ஆர்வலர் எம்.முகம்மது மற்றும் இளங்கோ ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், பிற்படுத்தப் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.5034 வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.25,170 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளையும், தென்காசி மாவட்ட தொழில் மையம் மூலம் 1 பயனாளிக்கு (வாகன புகை பரிசோதனை நிலையம்) 10.97 இலட்சத்திற்கான உதவித் தொகையினையும், 1 பயனாளிக்கு (சரக்கு வாகனம்) ரூ.03,43,97 இலட்சத்திற்கான உதவித் தொகையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.4000 மதிப்பிலான மண்புழு உரப்படுக்கையினையும், 1 பயனாளிக்கு ரூ.4000 மதிப்பிலான இனக்கவர்ச்சி பொறி, தென்னையில் சிகப்பு கூன் வண்டு மற்றும் காண்டா மிருக வண்டு கட்டுப்பாட்டினையும் மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.15 இலட்சத்து 170 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று பள்ளிகளுக்கு கேடயமும், மற்ற பள்ளிகளுக்கு நினைவுப் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், தென்காசி நகராட்சிக்குட்பட்ட வடக்கு ரதவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐமா பந்தியை துவக்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர்கள் லாவண்யா (தென்காசி), செல்வி.ஜெ. கவிதா (சங்கரன்கோவில்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சு.தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.