தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டுத் துறை சார்பில் சதுரங்கம் (ம) கையுந்துப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இது பற்றிய செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக சதுரங்கம் (ம) கையுந்துப்பந்து விளையாட்டு போட்டியானது 17.08.2024 அன்று காலை 7 மணிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.
சதுரங்க விளையாட்டு போட்டியில் QR Code மூலமாக முதலில் பதிவு செய்துள்ள 500 நபர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். இப்போட்டிக்கு 9 வயதிற்கு கீழ் உள்ள பிரிவு, 9 முதல் 12 வயதுள்ள பிரிவு, 12 முதல் 15 வயதுள்ள பிரிவு மாணவ, மாணவியர்கள் (ம) 15 வயதிற்கும் மேற்பட்ட ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம்.
கையுந்துப்பந்து விளையாட்டு போட்டியானது பள்ளி (ம) கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெறும். இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரியில் உறுதிச்சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் பிறப்பு சான்றிதழினை போட்டியின் போது சமர்ப்பிக்கப் படவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

You must be logged in to post a comment.