மலையிட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் மலையிட பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.30.03.2020- ல் வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண்.132, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.18.07.2024-ல் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!