தென்காசியில் நடைபயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றான “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதை அடிப்படையாக கொண்டு 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மையம் தென்காசி குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் போன்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நடை பயிற்சி மேற்கொண்டார்.

மேலும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அதனைச் சார்ந்த பரிசோதனைகளின் மருத்துவ முகாம் நடைபெறுவது மற்றும் பயனாளிகள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்தார். நடப்போம் நலம் பெறுவோம் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்படப் போவதாகவும் எனவே பொதுமக்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் நடைப்பயிற்சியினை தினசரி மேற்கொண்டு தொற்றா நோய்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு எதிர்காலங்களில் தொற்றா நோய்களின் சதவீதத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) மருத்துவர் கீதா ராணி, இரண்டாம் நிலை அலுவலர்கள், சுகாதாரத் துறையைச் சார்ந்த பணியாளர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!