தென்காசியில் நேஷ்னல் புக் டிரஸ்ட், புதுடில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பால்சுதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை முன்னிலை வகித்தார். செங்கோட்டை நல்நூலகர் ராமசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.




மேனாள் கல்வி அலுவலர் முனைவர் சுடலை முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சி.பி.ஐ தாலுகா செயலாளர் கிட்டப்பா, மேலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த புத்தகக் கண்காட்சி வரும் 30.09.2024 வரை நடைபெறுகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இங்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் புதிய மற்றும் பழைய பதிப்புகள் அதிகளவில் இடம் பிடித்திருந்தது. இறுதியில் மண்டல மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.