தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா 05.01.2024 முதல் 14.02.2024 வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு நிகழ்வாக நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி பெரிய கோவில் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பிரமணியன்,  ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் மாநில தலைவர் வைகை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி காசி விசுவநாதர் கோவில் முன்பிருந்து புறப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தெற்கு மாசி வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்றது. இந்த பேரணியில் தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேலகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கீழப்புலியூர் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி, மேலகரம் இம்மானுவேல் மெட்ரிக் பள்ளி, அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, மாணவ மாணவியர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் தென்காசி ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பயிற்சியாளாகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய அட்டைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை தென்காசி முத்து ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர் மாரிமுத்து, சங்கீதம் கமால், தெட்சணா மூர்த்தி திருவிலஞ்சி குமரன், ஆதிலா, முத்து பட்டு, அனஸ், ஜெயம் அபி, கிருஷ்ணாதுரை, மைதீன் இப்ராகிம், இஎன்எஸ். கணபதிகுமார், தென்றல் இப்ராகிம், பெல் மணி, ஓம்  நமச்சிவாயா மற்றும் பலர் சிறப்பாக  செய்திருந்தனர். முடிவில் தென்காசி தெட்சணாமூர்த்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர் திருவிலஞ்சி குமரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!