தென்காசி இலத்தூர் விலக்கு பகுதியில் அதி வேகமாக வந்த கனிமவள கனரக வாகனம் தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் நேரில் ஆய்வு செய்தார். குழந்தை உட்பட மூன்று பேர் இறந்ததாக தெரிகிறது.



தென்காசி-மதுரை செல்லும் சாலையில் தனியார் பேருந்தும், அதிவேகத்தில் வந்த கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரியும் நேருக்கு நேர் மோதி தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.