தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Audiometric Assistant பணியிடத்தில் தற்காலிக பணியாளர் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். Audiometric Assistant – : One year Audiologist Diplomo Course. மேற்கண்ட பணி இடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.01.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் (இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்), இலத்தூர் 627803 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5.00 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

