தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM)

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM) வரும் 08.12.2025 அன்று திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகள். பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

 

பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் மேளாவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறார்கள். பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.9600 முதல் ரூ.12500 வரை வழங்கப்படும். இந்த தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி முடிப்பவர்களுக்கு அரசு நேஷனல் அப்ரண்டீஸ் சான்றிதழ் (NAC) வழங்கப்படும்.

 

இம்முகாமில் மேற்கண்ட படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக, மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04633-298088, 9791768403, 9285391103 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!