நலம் காக்கும் ஸ்டாலின்; உயர் மருத்துவ சேவை முகாம்..

தென்காசி மாவட்டம் நெட்டூர் வட்டாரம் ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 01.11.2025 (சனிக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம் இருதயவியல். நரம்பியல் தோல், பல், கண் காது, மூக்கு, தொண்டை, மனநலம். இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

 

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!