தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா வாடியூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா வாடியூர் சாமியார் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ 8,00,000 மதிப்பீட்டில் வாறுகால் வசதி இன்றி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது பெய்த கனமழையால் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் விதமாக சாலை ஓரம் முறையாக தண்ணீர் வெளியேறும் வகையில் வாறுகால் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.