தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (18.09.2025) இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.






பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சுமார் 1000-ற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் (ம) மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், பாட்டாக்குறிச்சி துணை பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்