தென்காசி மாவட்டத்தில் கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி பொது மக்கள் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகா மேலக்கலங்கல் பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடினமான பாறைகள் வெடி வைத்து உடைத்து எடுக்கப்படுகிறது. அப்போது இப்பகுதியில் உள்ள வீடுகள் நில நடுக்கம் ஏற்படுவது போன்று நடுங்குவதாகவும், வீட்டு சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல் குவாரியை தடை செய்யக் கோரி கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்கள் கையேழுத்திட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.