தென்காசி மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தை பாவூர்சத்திரத்தில் அமைத்திட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தை பாவூர்சத்திரத்தில் அமைத்திட வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாடு குழு அமைப்பாளரும், மதிமுக ஒன்றியச் செயலருமான ராம.உதயசூரியன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பாவூர்சத்திரம் அமைந்துள்ளது.செங்கோட்டை-திருநெல்வேலி, சங்கரன்கோவில்-அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் நகரமாக இப்பகுதி விளங்குகிறது.புதிய மாவட்டத்தில் இடம் பெறும் என உத்தேசமாக கூறப்படும் நகரங்களான அம்பாசமுத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், செங்கோட்டை போன்ற நகரங்களில் இருந்து சுமார் 10 முதல் 30 கி.மீ. தூரத்துக்குள்ளாக அமைந்துள்ளது.

மேலும், தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச்சாலை பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் 24 மணி நேரமும் வாகன வசதி கிடைக்கும். நகரின்  மையப்பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி நிறைந்த நகரமாக உள்ளது.    அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு போதுமான இட வசதிகள் உள்ளதால், புதிய மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் பாவூர்சத்திரத்தில் அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!