செங்கோட்டை நகர் மன்ற அவசர கூட்டம்; திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம்..

செங்கோட்டை நகர் மன்ற அவசர கூட்டத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள நுழைவு வாயில் ஆர்ச்சை அகற்றக் கோரிய விவகாரத்தில், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் இராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆர்ச்சை அகற்ற நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதனால் திமுக அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு செங்கோட்டை  நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நுழைவு வாயிலை பொது மக்களின் நலன் கருதி அகற்றுவது தொடர்பான தீர்மானம் வாசிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக திமுக அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இந்நிலையில், ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தின் நடுவே நகர்மன்ற தலைவர் இராமலட்சுமி கூட்ட அரங்கத்தில் இருந்து வெளியேறினார். அவரை முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் திமுக உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் படி  நகர்மன்ற தலைவி இராமலட்சுமி ஆர்ச்சை அகற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம், கவுன்சிலர்கள் இசக்கி துரை பாண்டியன், பேபி, பினாஷா, மேரி, இசக்கியம்மாள். சரவண கார்த்திகை, முருகையா, சுப்பிரமணி, சரஸ்வதி, இந்துமதி, சுகந்தி, ராதா, ஜெகன், சுடர் ஒளி, முத்துப் பாண்டி, செல்வக்குமாரி, ராம்குமார், வேம்பு ராஜன், செண்பக ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!