தென்காசி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் வரும் 14.07.2025 அன்று காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 03 இரு சக்கர வாகனங்களும் 08 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன.
வாகனங்களை 11.07.2025 முதல் 13.07.2025 காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை நேரில் வந்து பார்வையிடலாம், இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனத்திற்கு 1,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும் முன்பணம் கட்டி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு 8248799630 மற்றும் 9600816083 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.