தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி..

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி 30.06.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 01.07.2025 அன்றும் காலை 9.00 மணிக்கு தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது.

 

30.06.2025 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: பூனா உடன்படிக்கை, அயல் நாடுகளில் அம்பேத்கரின் உயர் கல்வி, அம்பேத்கரும், காந்தியடிகளும், இந்திய அரசியலமைப்புச் சட்டம், சட்ட மேதை அம்பேத்கர்.

 

30.06.2025 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள். அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பௌத்தமும்.

 

01.07.2025 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: கலைத் தாயின் தவப்புதல்வன், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், நெஞ்சுக்கு நீதி.

 

01.07.2025 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், திராவிட சூரியனே குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், சமூக நீதி காவலர் கலைஞர்.

 

மேற்கண்ட தலைப்புகளில், தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு 3000, மூன்றாம் பரிசு 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியில் இருந்து இரண்டு மாணவ, மாணவியர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம்பரிசு ரூ.3.000, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2000 வீதம் இரண்டு மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப் பெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து இரண்டு மாணவ, மாணவியர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

மேலும், விவரங்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மணிமுத்தாறு வளாகம் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 2502521) தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பேச்சுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

 

செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!