தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை தாய் உள்ளிட்ட யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் இரண்டு நாளாக முயற்சி
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் நீர் தேக்க பகுதி அமைந்துள்ளது இப்பகுதியில்
(மே 26 அன்று) ஆண் குட்டி யானை
ஒன்று தாயைப் பிரிந்து தனியாக சுற்றித்
திரிவதாக வனத்துறையினருக்கு ஆற்று மீனவர்கள் மூலமாக தகவல் கிடைத்தது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் குட்டி யானையை பிடித்து வனத்துறை வேட்டை தடுப்பு முகாமிற்கு அழைத்து வந்தனர் குட்டி யானை சோர்வுடன் காணப்பட்டதால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட வனத்துறை கால்நடை அலுவலர் மருத்துவர். சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து குட்டியானைக்கு உயிர் காக்கும் மருந்துவ சிறப்பு சிகிச்சை அளித்தார் தொடர்ந்து குட்டி யானைக்கு இளநீர், தேங்காய், வாழைப்பழம் மற்றும் புரதச்சத்து உணவு வழங்கப்பட்டது வனத்துறை கால்நடை அலுவலர் மருத்துவர் சுகுமார் முகாமிலையே தங்கி குட்டியானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்
மேலும் யானை குட்டி கண்டறியபட்ட பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதி என்பதால் இந்த குட்டி யானை எங்கிருந்து தாயைப் பிரிந்து வந்தது என கண்டறிவதில் சிக்கல் உள்ளது
குட்டி யானை உணவு உட்கொள்வதால் இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கப்படுகிறது
தாய் யானையை தேடும் முயற்சியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால், குட்டி யானை நின்று கொண்டிருந்த வனப்பகுதிக்குள் தாய் யானையோ அல்லது யானை கூட்டத்தின் நடமாட்டமோ இல்லை
எனவே குட்டி யானையை மீண்டும் வனத்துறையினர் தங்கள் வசமே வைத்திருக்கின்றனர் ஒருவேளை தாய் யானையோ அல்லது யானைக் கூட்டமோ குட்டியானையை தேடி வரலாம் என வனத்துறையினர் மீண்டும்
வனப்பகுதியில் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால், யானை கூட்டமோ
தாய் யானையோ தென்படவில்லை
கடந்த சில நாட்களாக, குட்டி யானை தனது தாயை பிரிந்த சோகத்தில் சோர்வுடன் காணப்படுகிறது தற்போது குட்டி யானைக்கு தேவையான தொடர் மருத்துவ சிகிச்சையோடு யானை குட்டி உண்ணும் உணவின் எடை, தண்ணீர் பருகும் நேரங்கள், ஊட்டச்சத்து வகைகள் மற்றும் உணவு உண்ணும் போது வாயில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என்று மருத்துவரால் கண்காணிக்கப்படுகிறது
தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்
உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், சிறுமுகை வனச்சரகர் மனோஜ் மற்றும்
கோவை மாவட்ட வனத்துறை கால்நடை அலுவலர் மருத்துவர். சுகுமார் ஆகியோர் சிறுமுகை வனப்பகுதியில் குட்டி யானையுடன் முகாமில் உள்ளனர்
செய்தியாளர் ஷா நவாஸ்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









