திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சுமி தீர்த்தம் மற்றும் சஷ்டி மண்டப பணிகளுக்காக ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணிகளை துவக்கி வைத்தார்
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சுமி தீர்த்தம் புனரமைப்பு பணிகளுக்காக ஆறரை கோடி நிதி ஒதுக்கீட்டிலும் மற்றும் பாலாஜி நகரில் உள்ள சஷ்டி மண்டபம் கட்டும் பணிகளுக்காக ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டிலும் மொத்தம் 11 கோடி மதிப்பீட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை திருப்பரங்குன்றம் கோவில் இணை ஆணையாளர் சுரேஷ் மற்றும் தளபதி எம்எல்ஏ. திருப்பரங்குன்றம் கோவில் அர்ச்சகர் ராஜா பட்டர் மற்றும் சாமிநாத பட்டர் திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிவசக்தி திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.