பாலக்கோடு அடுத்து கரகூரில் எருதுவிடும் விழா..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து ஸ்ரீமாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைத்து, எருதாட்டம் நடத்துவது. இந்தாண்டிறக்கு எருது விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து இந்த கிராமங்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்கும் காளை மாடுகளை அலங்கராம் செய்து, கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பின்னர் தங்கள் குலவழக்கப்படி கிராமத்தின் கோயில் முன்பு உள்ள மைதினத்தில் காளைகளை அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து பிறகு காளைகளுக்கு புனித நீர் தெளித்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் போல அமைக்கப்பட்ட இடத்தில் ஒடவிட்டனர்.

அப்போது சீறிபாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டு ஓடியும், காளை சீண்டியும் விளையாடி மகிழ்ந்தனர். இந்த எருதாட்டத்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த எருதாட்டத்தை காண சுற்றி உள்ள கிராங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் ஆர்வமாக வந்து கண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்ட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!