சோழவந்தான் அருகே கோயில் குருவித்துறை கிராமத்தில் வைகை கரையில் அமைந்து வேண்டுவோர்க்கு வேண்டுதலை வழங்கும் சித்திர ரத வள்ளவப் பெருமாள் திருக்கோவில் பாண்டிய நாட்டு நவக்கிரக குருஸ்தலமாக விளங்குகிறது இக்கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு உற்சவர் சிலைகள் திருடப்பட்டு இதை கண்டுபிடித்து நீதிமன்றம் மூலமாக திருக்கோவிலில் உற்சவர் சிலைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டு சிலைகள் பின்னடைந்த பகுதியினை இந்து சமய அறநிலைத்துறை அனுமதியுடன் உற்சவ ிலைகளின் பின்னங்கள் சரி செய்யப்பட்டது சரி செய்யப்பட்ட உற்சவ சிலைகள் ஆகம விதிப்படி நேற்று அதிகாலை யாக பூஜை நடந்தது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ முன்னிலையில் சட்டக்கோபபட்டர் ஸ்ரீ பாலாஜி பட்டர் ராஜா பட்டர் ரங்கநாதன் பட்டர் ஸ்ரீதர் பட்டர் உள்பட 12 பட்டர்கள் யாக பூஜைகள் நடத்தினர் இதைத் தொடர்ந்து சித்திர ரத வல்லவப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருமண அலங்காரங்கள் நடந்து கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது இதையொட்டி கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் உபயதார்கள் ஆகியோர் முன்னிலையில் மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு நடந்தது இதைத்தொடர்ந்து யாக பூஜைகள்நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற்றது மதுரை திண்டுக்கல் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் கோவில் பணியாளர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









