மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கண்மாய் கரையோரம் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற உச்சிகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 2ம் தேதி செவ்வாய் கிழமை செவ்வாய் சாட்டுடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர். செவ்வாய் சாட்டிய நாளிலிருந்து அம்மனின் சக்தி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனின் சக்திபீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 9-ம் தேதி பொங்கலிட்டு,மாவிளக்கு எடுத்து கிராமப்பொதுமக்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து தொடர்ந்து திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கூத்தியார்குண்டு கண்மாய் கரையில் இருந்து மேளதாள ஊர்வலத்துடன் கோவில் பூசாரி “பூக்கரகம்” எடுத்து வந்து கோவில் பிரதட்சனம் செய்யப்பட்டு அம்மனின் சக்தி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.