சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 12 மே அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாளான இன்று காலை பூரணை புஷ்கலை சமேத ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் திருத்தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சிங்கம்புணரி நாட்டார்கள் ஊர்வலமாக வந்து சந்திரன் கூடத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மாலை சரியாக 4 மணி அளவில் வடம் பிடித்து துவக்கி வைக்க பக்தர்கள் திருத்தேரை இழுத்தனர்.
நான்கு ரத வீதிகளில் தேர் உலா வந்து நிலையை வந்து அடைந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் காணிக்கையான தேங்காய்களை திருத்தேர் நிலையில் சிதறு காய் அடித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். சுமார் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த திருத்தேரோட்டம் விழாவில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நிலையைக் கொண்டு வந்து சேர்த்தனர்.
திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் நிறைவேற வழக்குகள் வெற்றிபெற உள்ளிட்ட பலவிதமான நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் 101 201 501 என தேங்காய்களை நிலை மாட கல்மேடையில் வீசி எறிந்து உடைத்து தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றிக் கொண்டனர். சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டம் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். தேரோட்ட விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சிங்கம்புணரி அடைக்கலம் காத்த நாட்டார்கள் செய்திருந்தனர். சிங்கம்புணரி போலீசார் கூட்ட நெரிசலை சாமளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









