ஏர்வாடியில் வைகாசி உற்சவ விழா..

ஏர்வாடி அருகில்  மச்சவதார சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3வது ஆண்டு வைகாசி வசந்த உற்ஸவ விழா கடந்த 08/05/2019 அன்று (புதன்கிழமை) காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
பின்னர்  கல்யாண விநாயகர், பூ மாரியம்மன், திருநீற்றுச்சித்தர், பஞ்சலிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு ஏர்வாடி நகரில் பால்குடம், காவடிகள், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் எடுத்து விதியுலா வந்து சிறப்பு பூஜை நடந்தது.
பகலில் அன்னதானமும், மாலையில் உலக நன்மைக்கான திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பரத்மாஸ்ரீ ராமநாதன் சுவாமி செய்திருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!