பென்னாகரம் அருகே பெரும்பாலையில் மருதமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதமன்று தைப்பூச தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் தேர் இழுத்தும் மருதமலை முருகனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட 2000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நேற்று 3 மணியளவில் மருதமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பெரும்பாலை போலீஸ் எஸ் ஐ. மாரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி செய்தி யாளர். என். ஸ்ரீதரன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!