நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமான் நடனமாடிய சபைகள் ஐந்து அதில் சித்திர சபை எனப் பெயர் கொண்டது, குற்றாலநாதர் கோவில் ஆகும். இக்கோவிலின் தல விருட்சம் குறும்பலா. இங்கு சித்திர சபை முதன்மைக் கோவிலைவிட்டுச் சற்றுத் தள்ளி ஒரு கண்கவர் சித்திரக் கூடமாக அமைந்துள்ளது. இதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான அழகிய சுவற்றோவியங்கள், இந்து சமயப் புராணக் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன. முக்கிய திருவிழாக்களின் போது குறும்பலாவீஸ்வரர் கோவிலில் இருந்து நடராசர் உருவச்சிலை இங்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இன்று ஆருத்தரா தரிசனத்தின் போது தாண்டவ தீப ஆராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடையம்: பாரதி


You must be logged in to post a comment.