வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..

காட்பாடிமுல்லை நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேலூர் அடுத்த சேனூர் ஆர்ஜி. முல்லை நகர் குளக்கரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு யாக கால பூஜை தீபாராதனை நடைபெற்றது பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. மகாதீபாராதனை பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

அதே போல் வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு மார்க்க பந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறப்பு நடைபெற்றது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) முன்னிட்டு நள்ளிரவு சிம்ம குளம் திறப்பு நடந்தது. பெண்கள் இந்த சிம்ம குளத்தில் மூழ்கி எழுந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் தீவினை நீங்கி நலமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலில் படுத்து இருந்து சிம்ம குளத்தில் மூழ்கி பின்பு மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்க்க பந்தீஸ்வரர் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார் உதவி ஆணையர் விஜயா, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

கே.எம்.வாரியார், செய்தியாளர் – வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!