இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஓடைத்தோப்பு சந்தனபூமாரி அம்மன் கோயில் 71ம் ஆண்டு முளைப்பாரி விழாவை முன்னிட்டு 26.8.2018ல் முத்தெடுக்கப்பட்டது. 28.8.2018 மாலை 6 மணியளவில் காப்பு கட்டு, முத்து பரப்புடன் விழா துவங்கியது. இதனையொட்டி ஆக., 28 முதல் செப்., 2 வரை வஸ்தாபிகள் முருகானந்தம், செந்திவேல் தலைமையில் இளைஞர்களின் ஒயிலாட்டம் தினமும் இரவு நடந்தது. முளைப்பாரி விழா செப்., 4 மாலை அம்மன் கரகம் கட்ட கோயில் பூஜகர் பூவேந்திரன் தலைமையில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் வடக்கு கடற்கரை சென்றனர். அங்கிருந்து அன்றிரவு வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட தாரை தப்பட்டம் முழங்க புறப்பட்ட அம்மன் கரகம் இரவு 12 மணிக்கு கோயில் வந்தடைந்தது.
இன்று (05.9. 2018) காலை அம்மன் கரகம் பக்தர்கள் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. கோயில் வாசலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் பக்தர்கள் மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4 மணி அளவில் துவங்கிய ஒயிலாட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் அம்மன் கரகம் பாரி சுமந்த பெண்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரித்த தேரில் சிம்ம வாகனத்தில் வெள்ளி கவசம் அணிந்த அம்மனுடன் ஊர்வலமாக புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் சென்று கடலில் கரைக்கப்பட்டது. இரவு கிராமிய கலை . நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் கவுன்சிலர் பூவேந்திரன் (திமுக), ரயில்வே ஊழியர்கள் (ஓய்வு) ஆறுமுகம், நாராயணன், துரைக்கண்ணு, முன்னாள் துணை சேர்மன் நாகராஜன் (அதிமுக) தூத்துக்குடி டிஎஸ்எப் மேலாளர் முருசேசன், செல்வ களஞ்சியம் (அதிமுக), நாகநாதன் (திமுக), இந்திய கடலோர காவல் படை ஊழியர்கள் முருகேசன், முனியசாமி, செந்தில் (எ) முத்திருளாண்டி, சூபர்வைசர் சுரேஷ் குமார், பாலசுப்ரமணியன் இளைஞரணி நிர்வாகிகள் ராஜா திருநாவுக்கரசு, நம்பு வெங்கடேஸ்வரன், நம்பு வேணு (திமுக), ராஜ பாரதி, கோகுல கண்ணன், கார்த்திக் கணேஷ், சஞ்சய், பிரதாப் உள்ளிட்டோ விழா ஏற்பாடுகளை செய்தனர். செப்., 11ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது.




You must be logged in to post a comment.