இராமநாதபுரம்ம மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தின் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாவுக்கு பாத்தியமான ஸ்ரீ கோவிந்தன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடந்தது
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே புதுவயல் கிராமத்தின் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தன் திருக்கோவில் கிபி 1643 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ பூசாரி அழகனால் ஸ்ரீ கோவிந்தன் ஆலயம் அமைக்கப்பட்டு 375 ஆண்டுகளாக 12 தலைமுறைகளாக பூஜை செய்து வந்து அவரது வகையறா கமிட்டி நிர்வாகிகள் ஸ்ரீ கோவிந்தனுக்கு நூதனமான முறையில் ஆலயம் அமைத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கே விக்னேஸ்வரர் பூஜையும் தொடர்ந்து வாஸ்துசாந்தி ரக்ஷாபந்தனம் யாகசாலை பிரவேசம் வேத பாராயணம் பூஜை ஹோமங்கள் பூர்ணாஹுதி சாற்றுமுறை நடந்தது புதன்கிழமை காலை 7. 15 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் வேத பாராயணங்களும் நடந்தன தொடர்ந்து காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி சாற்றுமுறை நடந்தது மாலை 5 மணிக்கு பிம்பசுத்தி திருமஞ்சனம் மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஹோமங்கள் நடந்தன.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மேல் விஸ்வரூபம் நான்காம் கால யாகசாலை பூஜை ஹோமங்கள் வேத பாராயணங்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக கடம் புறப்பாடு காலை 9. 36 மணிக்கு மேல் தொடங்கியது வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க வானத்தில் கருடபகவான் சுற்றிவர கோபுர கலசங்களில் வேதவிற்பன்னர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று புனித நீர் ஊற்றிய நிகழ்ச்சியை கண்டு வணங்கினர் இதனை தொடர்ந்து கோவிந்தனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன .
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை சங்கு, டிஆர்ஓ காளிதாஸ் ஆகியோர் தலைமையில் கர்த்தர் முனியாண்டி, நிர்வாக தலைவர் ராமையா, கணக்கர் உடையார், நிர்வாக ஆலோசகர் நவநீதகிருஷ்ணன், உப தலைவர் சேதுகிருஷ்ணன், பொருளாளர் மகாலிங்கம், பூசாரி முனீஸ்வரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பரமக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விழுப்புரம் சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










