இராமநாதபுரம் மண்டபம் மறவர் தெரு ஆதி ஸ்ரீ முத்துமாரியம்மன் 262 ம் ஆண்டு முளைப்பாரி விழாவை முன்னிட்டு 12.8.2018ல் முத்தெடுக்கப்பட்டது. 14.8.2018 மாலை 6 மணியளவில் காப்பு கட்டு, முத்து பரப்புடன் விழா துவங்கியது. இதனையொட்டி ஆக., 14 முதல் ஆக., 19 வரை வஸ்தாபி முரு.முத்துராமன் தலைமையில் இளைஞர்களின் ஒயிலாட்டம் தினமும் இரவு நடந்தது. முளைப்பாரி விழா ஆக., 21 மாலை அம்மன் கரகம் கட்ட கோயில் பூஜகர் கருப்பையா தலைமையில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் நல்ல பகவதி கோயில் சென்றனர். அங்கிருந்து அன்றிரவு வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட தாரை தப்பட்டம் முழங்க அம்மன் கரகம் கிளம்பி கோயில் வந்தடைந்தது.
நேற்று (22.8.2018) காலை அம்மன் கரகம் பக்தர்கள் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. கோயில் வாசலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4 மணி அளவில் துவங்கிய ஒயிலாட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் அம்மன் கரகம் பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
இரவு நடந்த கலை நிகழ்ச்சிக்கு ராமு களஞ்சியம் அறக்கட்டளை நிர்வாகி லட்சுமி நாச்சியார் களஞ்சியம் தலைமை வகித்தார். ராஜா கல்வி அறக்கட்டளை நிறுவனரும், தி.மு.க., நகர் செயலாருமான த.ராஜா, தொழிலதிபரும், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரு மான எஸ்.பாலன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மனும், மண்டபம் ஒன்றிய திமுக மீனவரணி அமைப்பாளருமாகிய மு.நம்புராஜன், மொழிப்போர் தியாகியும், பி எஸ் என் எல் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரும் தி மு க மாவட்ட பிரதிநிதியுமான வி.எம்.கே என்ற வெ.காந்தகுமார் முன்னிலை வகித்தனர். கோயில் கமிட்டி தலைவர் பொ.சந்திர சேகர், செயலாளர் மு.லட்சுமணன், பொருளாளர், பூசாரி கருப்பையா, மு.கிருஷ்ணமூர்த்தி, வஸ்தாபி மு.முத்துராமன், மல்லிகை இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கா. லாடசாமி, உப தலைவர் ர . அருண்குமார், செயலாளர் கா.பாலாஜி, பொருளாளர் க.தில்லை சந்துரு உள்ளிட்டோ விழா ஏற்பாடுகளை செய்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











