தமிழக அரசு இந்து அறநிலைத்துறை கீழ் செயல்படும் கோயில்களில் ஆன்மிக பணியில் ஈடுபத்தப்படும் யானைகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் புத்துணர்வு சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.
14.12.2018 இல் தொடங்கிய சிறப்பு முகாமில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலெட்சுமி கலந்து கொள்ள 12 .12.2018 ஆம் தேதி இரவு லாரி மூலம் அழைத்து செல்லப்பட்டது. முகாம்
சென்ற யானைகளுக்கு கால்நடை சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ கிசிச்சை, ஊட்டச்சத்து உணவுகள் அளித்தல் இயற்கை சூழலில் 45 நாள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். சிறப்பு முகாம் நிறைவடைந்த நிலையில் முகாமில் பங்கேற்பி யானைகள் மீண்டும் அந்தந்த பகுதிக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை ராமேஸ்வரம் வந்த யானை ராமலெட்சுமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் மங்கையர் கரசி தலைமையில் சிவச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர். முகாம் சென்ற போது 3,700 கிலோ இருந்த ராமலட்சுமி தற்போது 100 கிலோ எடை அதிகரித்துள்ளது. இந்த முகாமில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, ஊட்டச்சத்து காரணமாக 100 கிலோ எடை கூடி உள்ளதாக கோயில் அதிகாரிகள் கூறினர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









