இராமநாதபுரம்: மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை (23.12.2024) சாத்தப்படுகிறது. இதையொட்டி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ராமேஸ்வரம் நகர் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து படி யளக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனால் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு சுவாமி – அம்பாள் கோயிலுக்கு வந்தவுடன் மதியம் 12 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு உச்சிகால பூஜை நடைபெற உள்ளது. கோயில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வும், கோயில் வளாக தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.