கலாம் நினைவிடத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மலர் தூவி மரியாதை..

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் இன்று இராமேஸ்வரம் வந்தார். முன்னதாக அவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரியில் சுற்றுலாவை நிறைவு செய்து, ராமேஸ்வரம் வந்தார்.

ராமேஸ்வரம் நுழையும் முன் பேய்க்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாம் நினைவிடம் சென்றார். கலாம் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு, கலாம் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து காரில் கிளம்பிய சந்திர சேகர ராவ் இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

நாளை (10.4.2019) காலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின்பு சுவாமி தரிசனம் செய்கிறார். சந்திர சேகர ராவ் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!