இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1949 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் இந்நாள். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பு, குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு விழுமியங்கள், உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி விழிப்புடன் இருக்க இந்த நாள் ஊக்குவிக்கிறது. தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதில் நீதி, சுதந்திரம். சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எவ்வாறு அவசியமென்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 26.11.2024 அன்று இந்திய அரசியலைமைப்பு தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.