இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகம் நடைபெற்றது.
கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார். இதில் இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். .
விழாவில் கல்லூரியின் முதல்வர் ஏ. சேக் தாவூத் தலைமை தாங்கி பேசுகையில், சவால்கள் நிறைந்த இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவதற்கான ஆலோசனைகளை மற்றும் வழிகாட்டும் பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்களின் தனி திறமைகளை வளர்த்துக் கொள்ளுவார்கள் என்றும் இந்த பயிற்சிக்கு பிறகு புதிதாக தொழில் துவங்கும் இளம் தலைமுறை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.
இவ்விழாவில் , தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) உறுப்பினர் செயலர் பேராசிரியர். முனைவர் S.வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பயிற்சி பெற்ற 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிறைவாக, மின்னியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.