தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஏழாவது ஊதியக் குழு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500, எட்டாவது ஊதிய குழு அடிப்படை ஊதியத்தில் ரூ.14,800 இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எட்டாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் ஐ ஏ எஸ் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணையை விரை படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் முத்து முருகன், மாநில நிர்வாகி ராஜேஸ்வரி தலைமையில் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 26 ஆசிரியைகள் உட்பட104 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










